மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட பெண் உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட  பெண் ஒருவா்  உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மன அழுத்தம் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில்  உட்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்துள்ளார். Spread the love  பெண் உயிரிழப்புமன அழுத்தம்மாத்திரைகள்மானிப்பாய்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

Related Posts