பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்

பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்

by ilankai

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மஹிந்தவை தூக்கிலிட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.இந்த கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் விமல் வீரவன்ச மேலும் கருத்து தெரிவிக்கையில் சரத் பொன்சேகா போன்ற ஓர் மோசமான நபரை ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மஹிந்தவை தூக்கிலிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான மோசமான ஓர் நபருடன் இணைந்து யுத்தத்தை வழி நடத்தியமை தொடர்பில் மஹிந்தவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Related Posts