பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இன்று (09.10.25) காலை ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்ச தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை! முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். காவற்துறையினரால் விடுக்கப்பட்ட முறையான அழைப்பாணையைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவர் முன்னிலையாகினார். அவர் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் – விமல் தங்காலை காவற்துறையில்! – Global Tamil News
22