சமிக்ஞையை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது! – Global Tamil News

by ilankai

மாத்தறை, வெல்லமடம பகுதியில் சென்ற கார் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவற்துறையினர் காரை நிறுத்துமாறு கூறிய போதும், மீறிச் சென்றதால் காவற்துறையினர்  துப்பாக்கிப் பிரேயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து குறித்த கார், மாத்தறை, ஜனராஜ மாவத்தை பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர்   தெரிவித்தனர். குறித்த காரில் பயணித்தவ இருவரும் தப்பிச் சென்ற நிலையில் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர்  மேலும் தெரிவித்தனர்.

Related Posts