வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் உள்ளுர் அரசியல் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.முன்னாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர் வி.மணிவண்ணன் வசமுள்ள நல்லூர் பிரதேசசபைக்கு எதிராக தமிழரசு மற்றும் முன்னணி தூண்டுதலில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அரியாலை கிழக்கு பகுதியில் புதன்கிழமை (08) இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.மணிவண்ணன் ஆதரவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் என கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் , வீதியை வழி மறித்ததால் ஏ-9 வீதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டது.நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் இனிமேல் குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. என போராட்டத்தில் இணைந்திருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுநர் செயலகத்திலும் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.போராட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி எம்.ஏ.சுமந்திரன் தரப்பு ஆதரவாளர்களுடன் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பங்கெடுத்திருந்தனர்.
அரியாலையில் நின்றது யார்?
42
previous post