யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்து எடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் என தேசிய சமாதான பேரவையின் நிர்வாக இயக்குனர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் பல தெரிவிக்கையில் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த வருகின்ற நிலையில் செம்மணி விவகாரம் தற்போது பேசு பொருளாக அமைந்திருக்கிறது. செம்மணி அகழ்வின் போது வெளி வரும் மனித எலும்புக்கூடுகள் திட்டமிட்ட முறையில் தனி நபர்களை கைது செய்து கொலை செய்து புதைக்கப்பட்டு தற்போது எலும்புக்கூடுகளாக வெளி வருகிறது.செம்மணிக்காக நீதி கோரும் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் சர்வதேச நீதியை கேட்கிறார்கள் அதில் தவறில்லை. எம்மைப் பொறுத்தவரையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்காக வெளிநாடுகளில் இருந்து நடைமுறை சாத்தியமான நிபுணத்துவத்தை பெற்று அகழ்வு இடம்பெற வேண்டும். ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவை செம்மணி விவகாரம் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையை வலியுறுத்துகின்ற நிலையில் தேவை ஏற்படுகின்ற போது வெளிநாட்டு நிபுணத்துவத்தை பெறுமாறு கூறுகிறது.ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் எமது அமைப்பு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்தும் பயணிப்பதோடு சர்வதேச நிபுணத்துவத்துடன் உண்மையானதும் நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நிபுணத்துவத்துடன் விசாரணைகள்!
26
previous post