27
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதாகலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த முன்பிணை மனு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.இதனிடையே மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் முன்னாள் கோத்தபாயவின் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, வழக்கு தொடர்பான உண்மைகளை நிறுவ குறுகிய கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தார்.