மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையிலே இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அடம்பன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த இளைஞரை பல பகுதியில் தேடுதல் மேற்கொண்ட நிலையில்,குறித்த இளைஞன் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை அயல் கிராமத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளன
காணாமல் போன அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு! – Global Tamil News
29