ஜெய்ப்பூா் மருத்துவமனையில் தீவிபத்து – 6  நோயாளிகள்    பலி – Global Tamil News

by ilankai

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (06) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ   விபத்தில் சிக்கி  6  நோயாளிகள்    உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும்  அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளததனால்  உயிாிழப்பு  எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவில் ஒரு  தீவிபத்து ஏற்பட்டதாகலும்   தீ விபத்து ஏற்பட்ட போது ஐசியுவில் 11 நோயாளிகள் அங்கு இருந்ததாகவும்  அவர்களில் பெரும்பாலானோர் கோமா நிலையில் இருந்தனர் எனவும்  மருத்துவமனை நிர்வாகம் தொிவித்துள்ளது. மேலும் . தீ விபத்துக்கு பின்னா் அவா்களை உடனடியாக   மீட்டு   நீண்ட நேரம் போராடி சிகிச்சை அளித்த போதும் நோயாளிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இறந்த நோயாளிகளில், இரண்டு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள்  என்பதுடன்  5 நோயாளிகள் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர்  எனவும்  மருத்துவமனை நிர்வாகம் தொிவித்துள்ளது.

Related Posts