இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை

by ilankai

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் “கானல் நீதி” எனும் தலைப்பிலான உரையாடல் இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இன அழிப்பின் சர்வதேசத்திற்கு வாக்கு மூலம் அளித்தேன் ஐ.நா மனித உரிமை பேரவையில் பொறுப்பு கூற வேண்டிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை அல்ல என நான் கூறினேன்.நான் வழங்கிய சாட்சியங்களில் புலிகளின் நடேசன், புலித்தேவன் மற்றும் பத்மநாதன் ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். போரை நிறுத்துமாறு அரசாங்கத்துடன் பேசி பொறிமுறையை உருவாக்கித் தருமாறு கூறினர்.நான் பசில் ராஜபக்சவும் மகிந்தாவும் அருட்தந்தையர்கள் சிலரும் இணைந்து மக்களை பாதுகாக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. மே 16 இது இடம்பெற்றது. வேறு தரப்பு பக்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு இலட்சத்திற்கும் ஒன்றரை இலட்சத்திற்கும் இடைப்பட்ட மக்களை மீட்க இந்த முயற்சி எட்டப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் ஆட்லறிகள் மூலம் குறித்த பகுதிக்குள் தாக்குதலை மேற்கொண்டு மக்களை அழித்தனர்.இதன்போது குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதனை மே16 ஆம் திகதி புலிகள் நேரடியாக கூறினர்.இந்த இன அழிப்பு தொடர்பாக சம்பந்தன் மூன்று தூதர்களுக்கு கூறுமாறு கூறினார். நான் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய தூதரகங்களுக்கு கூறினேன்.இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை என மேலும் தெரிவித்தார்.

Related Posts