யாழில்.போதைப்பொருளுடன் ஒருவர் கைது – போதைப்பொருள் விற்ற ஒரு தொகை பணமும் மீட்பு

by ilankai

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை விற்ற ஒரு தொகை பணத்துடன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியில் நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை கைது செய்து சோதனையிட்ட வேளை , குறித்த நபரிடம் இருந்து 08 கிராம் ஹெரோயின் , 16 கிராம் ஐஸ் , 120 போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , போதைப்பொருள் விற்ற பணமான 2 இலட்சத்து 70ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts