தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸவிகாரைக்கு எதிராக போயா தினமான இன்று திங்கட்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி,கோசமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு நின்றிருந்தனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், கலந்து கொண்டனர்.எனினும் முன்னணியின் பங்காளிகளான ஈபிடிபி முன்னாள் முக்கியஸ்தர் சந்திரகுமார் மற்றும் தமிழீழ விடுதலைக்கழக தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட எவரும் பங்கெடுக்கவில்லை.தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற போதும் கட்சியின் உள்ளுராட்சி பிரதிநிதிகள் எவரும் எட்டிக்கூட பார்ப்பதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
தையிட்டியில் பங்காளிகளை காணோம்?
24