கோண்டாவிலும் வீடு கையளிப்பு! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் ‘சமட்ட நிவஹண’ வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று அதன் பயனாளியிடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் சேர்த்து 88 வீடுகளிற்கான நிதியோதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 80 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. 15 பிரதேச செயலகபிரிவுகளிலும் தலா 1 வீடு வீதம் இவ்வாரம் கையளிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட செயலரும் , தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டினை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரகேரரும் கையளித்தனர்.

Related Posts