42
வாழைச்சேனையில் ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! மதுரி Tuesday, September 30, 2025 மட்டக்களப்பு மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Related Posts மட்டக்களப்பு Post a Comment