மன்னார் காற்றாலை:அறுவர் கைது!

by ilankai

மன்னார் காற்றாலை:அறுவர் கைது!  மன்னார் காற்றாலைக்கு எதிராக போராடிவரும் அருட்தந்தை மார்கஸ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யும் நடவடிக்கையினை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.நேற்று போராட்டத்தில் ஒன்று திரண்ட மக்கள் முன்னிலையில் மேலும் ஒருமாதகாலம் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்தி விசேட நிபுணர்குழுவை நியமித்து நடுநிலையான பகுப்பாய்வுகள் முன்னெடுக்கப்படும் என  மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தனர்.எனினும் இன்று அதிகாலை காற்றாலை உபகரண தொகுதி மன்னார் தீவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனிடையே காற்றாலைக்கெதிரான போராட்டம் இன்றுடன் 59 நாட்களாக தொடர்கிறது. Post a Comment

Related Posts