கிளிநொச்சியின் தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவான்கொட்டியில் இன்று (29) காலை குண்டுவெடிப்பு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.யுத்த நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றில் துப்புரவு பணிக்காக சென்ற இரு பொதுமக்களே படுகாயமடைந்துள்ளனர்.நிலத்திற்கு கீழ் புதையுண்டு இருந்த குண்டு வெடித்து அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்டு வெடிப்பு அனர்த்தத்தில் கச்சாய் மற்றும் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மற்றும் 50 வயதுடை குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளனர்.யுத்தகாலப்பகுதியில் புதையுண்டிருக்கலாமென நம்பப்படும் குண்டுகளே வெடித்துள்ளன.யுத்தம் முடிவுக்கு வந்து 15வருடங்கள் கடந்துள்ள நிலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
தட்டுவன் கொட்டி குண்டு எக்காலத்தினது?
41
previous post