மன்னார் காற்றாலை:கொழும்பில் போராட்டம்!

by ilankai

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நாளை 19ம் திகதி முன்னெடுக்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம்  47 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அப்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் “மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நாளைய தினம் (19) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மாலை வேளை முன்னெடுக்கப்படவுள்ளது.மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர், அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்து இருப்பினும், அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் கோரிக்கைகளை முன் வைத்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் இடம்பெற உள்ளது.குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும் மற்றும் மத தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Related Posts