செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு ஆரம்பமாகவுள்ளது.மனிதப் புதைகுழி வழக்கு வியாழக்கிழமை(18) அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் ஒக்ரோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.ஒக்ரோபர் 01ம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஒக்ரோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி நிரைஞ்சன் தெரிவித்தார்.செம்மணி சிந்துப்பாத்தியில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அதிகம் கிடைத்திருந்தது .போரின்போதும், போர் நிறைவடைந்த பிறகும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல, கொழும்பு துறைமுகம் என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி:3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்?
2
previous post