பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

by ilankai

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (18.09.25) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே  விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா காவற்துறையினரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பேக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பேக்கோ சமன்” என்பவரின் மனைவி ஓகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு காவற்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts