6
நாவாந்துறை பகுதியில் நீண்ட காலமாக மாவா விற்பனையில் ஈடுபட்ட வந்தார் எனும் குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரிடம் இருந்து 470 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Spread the love நாவாந்துறைமாவா பாக்கு