பெகோ சமன் – தெம்பிலி லஹிரு ஆகியோரை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி! – Global Tamil News

by ilankai

‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக ‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17.09.25) காவற்துறையினருக்கு அனுமதி அளித்துள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோர்  வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்ற  குழு காலை 9 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, காவற்துறையினரின் உடற் சோதனைக்குப் பிறகு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என கூறப்படும் “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts