தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரை ஏற்றிச் சென்ற வேன், லொறி ஒன்றுடன் மோதியதில் 35 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஓபத வீரதொட்ட பிரதேசத்திலுள்ள மல்தூவ கெதர, இத்தகட்டிய பகுதியைச் சேர்ந்த புஷ்பகுமாரி சந்தமாலி எனும் வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 சிறுவர்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிற்கு அழைத்து வருவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக, தவலமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இக்குழுவினர், அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம மற்றும் கஹதுடுவ இடைமாறலுக்கு இடையில் கொழும்பு நோக்கிச் சென்ற அதிகுளிர்சாதன லொறியின் பின்புறத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து இடம்பெற்ற வேளையில் வேனின் முன்புறம் இறந்த யுவதியும், வேனின் சாரதியான அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்த ஆணும் பயணித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.வர்த்தகத்தில் ஈடுபடும் அவர்கள் வரும், டிசம்பரில் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகளைச் செய்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து – யுவதி உயிரிழப்பு
2
previous post