உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று தனக்கு பக்கத்தில் ஆசனத்தை உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிபவானந்தராஜா வழங்கினார். உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது கூட்டத்திற்கு வருகை தந்த உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் தெற்கில் இடம்பெறும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அந்த பகுதியின் தவிசாளருக்கு மேல் இருக்கையில் ஆசனம் வழங்கப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இல்லை. இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்டம் தெற்கிற்கு ஒன்றும் வடக்கிற்கு ஒன்றாக இருக்க முடியாது எனக்கு உரிய ஆசனம் வேண்டும் என்றார். இதன்போது பதில் வழங்கிய அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்த ராஜா இங்கு எந்த அரசியலும் இல்லை. உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன் வாருங்கள் என தனக்கு அருகில் ஆசனத்தில் அமர வைத்தார்.. அதனை அடுத்து கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தவிசாளர் எழுந்து சென்று அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்த ராஜாவுக்கு கைகொடுத்து, அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
சிறி பவானந்தராஜாவின் செயற்பாடு – Global Tamil News
1