மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்புபட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைவதாக அறிவிப்பு! – Global Tamil News
5