முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம் என ஊடகவியலாளர்களிடையே மைத்திரி தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டமாகும். அந்த சட்டத்தின் பிரகாரம், முன்னாள் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அந்த சட்டத்தை ரத்து செய்து போக சொன்னார்கள் நாங்கள் போகிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையெனவும் மைத்திரி தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்சவை சுற்றி ஒரு பெரிய கூட்டம் ஆனால் நானோ மக்களை அழைத்து வருவதில்லை.நான் மக்களை அழைத்து வரும் தேவையுமில்லையெனவும் மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.
மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லை:மைத்திரி!
2
previous post