தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் இன்று நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.இதனிடையே திலீபனின் நினைவேந்தலினை முன்னிட்டு ஆவணக் காட்சி இடத்தையும் மாவீரர் நாள் நினைவேந்தலையும் நடத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்ற இடத்தினை வழங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14.09.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தியாக தீபம் திலீபன் அண்ணாவினுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களிலே அவர் அனுபவித்த வேதனைகளையும் அவருடைய தளராத உறுதியையும் ஆவணப்படுத்தி ஒரு ஆவண காட்சியகமாக 2023 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம்.நல்லூரில் திலீபன் அண்ணாவுடைய பிரதான தூபி அமைந்திருக்கின்ற பகுதியில் அதாவது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியிலே உரிய நடைமுறைகளுடன் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வந்திருந்தோம்.நாங்கள் தொடர்ச்சியாகவே அந்த இடத்திலே அந்த ஆவண காட்சியகத்தை செய்து வருகின்றோம். இந்த நிலையிலே அந்த நிகழ்வை குழப்பும் வகையிலே அல்லது அந்த நிகழ்வை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையிலே இந்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன.நாங்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து அதே இடத்திலேயே மாவீரர் நாள் நிகழ்வுகளையும் செய்து வருகின்றோம். 25,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை நாங்கள் அந்த இடத்திலே வைத்திருந்தோம்.2019 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலே இருந்த பொழுது, குறித்த கல்வெட்டுகளை வைத்து அந்த நிகழ்வினை முதன்முதலாக ஆரம்பித்த பொழுது எங்களுடைய கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வந்தது.இரண்டு நிகழ்வுகளையும் இந்த முறை தாங்கள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே முன் பதிவு செய்திருக்கின்றார்கள். உண்மையில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான அந்த காணியிலே யாரும் முன்பதிவு செய்யலாம்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒரு அறம் ஒன்று இருக்க வேண்டும். அந்த அறத்தின் படி அவர்கள் செய்யவில்லை என்பதை எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கையாகவும், ஏனென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவீரர் நாளை கோப்பாயிலே வருடா வருடம் செய்து வருகின்றார்கள் எனவும் பார்த்தீபன் சட்டிக்காட்டியுள்ளார்.
தீலீபம் நினைவேந்தல் ஆரம்பம்!
2
previous post