பெக்கோ சமனின் நெருங்கிய சகா துப்பாக்கியுடன் கைது! – Global Tamil News

by ilankai

கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் குறித்த சந்தேகநபர், T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2 மெகசின்கள் மற்றும் ஒரு இராணுவ சீருடை ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். Spread the love  இலங்கைகைதுபெக்கோ சமன்

Related Posts