ராமர் பஜனை என்பது மலையக மக்களின் வாழ்வில், குறிப்பாக ராமர் வழிபாட்டை மையமாகக் கொண்ட பஜனை கோயில்களில், ஆழமாகப் பதிந்த ஒரு கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்வு. இது வெறுமனே ஒரு வழிபாடு மட்டுமன்றி, சமூக ஒற்றுமைக்கான ஒரு பாலமாகவும், மலையகத் தமிழர்களின் கலைஇ இசை மற்றும் நம்பிக்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கான ஒரு ஊடகமாகவும் திகழ்கிறது. ராமர் பஜனை வருடா வருடம் நடத்தப்படுகின்றன. இந் நிகழ்வுகளில், பக்தர்கள் ஒன்று கூடி பஜனைப் பாடல்களைப் பாடி, ராமரின் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களது பக்தியை வெளிப்படுத்துகின்றனர். பஜனை மடங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்வுகள்இ ஒரு சமூகக் கூடலாகவும் செயல்படுகின்றன. இங்கு மக்கள் தங்களது இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், உறவுகளைப் புதுப்பித்துக் கொள்கின்றனர்இ மேலும்இ ஒரு கூட்டு ஆன்மிக அனுபவத்தை அடைகின்றனர். இந்த பஜனை நிகழ்வுகள், மலையகத்தில் உள்ள ராமர் ஆலயங்களில் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, இலங்கைத் தமிழர்களின் கலாசாரப் பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. அந்தவகையில் மலையக மக்கள் மத்தியில் உள்;ள ராமர் பஜனையினை பற்றி பார்ப்போம். ராமர் பஜனை மலையக மக்கள் மத்தியில் காணப்படும் வழிப்பாட்டு முறைகளில் ஒன்றாக ராமர் பஜனை காணப்படுகின்றது. ராமர் பஜனை மார்கழி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்து தைப்பொங்கல் வரையான 45 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இவ் வழிப்பாட்டினை வருடா வருடம் நடாத்துவதற்கு “ராமர் பஜனை குழுஃகமிடி” ஒன்று ஒவ்வொரு ஊரிலும் காணப்படும். பஜனை கமிடியும் பொதுமக்களும் மார்கழி மாதம் பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே கோயிலில் ஒன்று கூடி சில முடிவுகளை எடுப்பர். அக் கலந்துரையாடலில் அந்த ஆண்டுக்கான ராமர் பஜனையில் கம்பத்தினை தூக்குபவர் யார்? விபூதி தட்டினை தூக்குபவர் யார்? மற்றும் அந்த ஆண்டு ராமர் பஜனையினை நடாத்தி செல்வது எப்படி போன்ற திட்டங்களை எடுப்பர். ராமர் பஜனையில் கம்பம்இ விபூதி தட்டினை தூக்குபவர்கள் பொதுமக்கள் முன்னிலையிலேயே தெரிவுசெய்யப்படுகின்றர். இவர்களினால் தெரிவு செய்யப்படுபவர்களே ராமர் பஜனையின் போது கம்பத்தினையும்இ விபூதி தட்டினையும் தூக்குவர். இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் 3 அல்லது 7ஆண்டுகள் தொடர்ச்சியாக கம்பத்தினை தூக்க வேண்டும். கம்பத்தினை தூக்குவதற்காக ஆசையாக பல இளைஞர்கள் முன்வருவர். விருப்பமான நபர்களின் பெயர்களை துண்டில் எழுதி குழுக்கள் முறையில்; பஜனை கமிடி தலைவரோஇ ஆலய பூசாரியோ அல்லது சிறு குழந்தையோ எடுப்பர். அந்த துண்டில் பெயர் உள்ளவரே கம்பம்இ விபூதி தட்டினை தூக்க தகுதியுடைவர்களாகின்றனர். இவ்வாறு வாய்ப்பு கிடைப்பவர்கள் அதனை இறையருளாக நம்புகின்றனர். ராமர் பஜனையில் கம்பம் கம்பம் என்பது ராமர் பஜனையில் முக்கியம் இடம் பெறும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனையே இவர்கள் தெய்வமாக கருதி வழிப்படுகின்றனர். பஜனைக் காலத்தில் கம்பத்தினையே வீடு வீடாக தூக்கி செல்கின்றனர். இதன் அமைப்பினை நோக்கும் போதுஇ இது பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். அதன் அமைப்பு இடத்திற்கு இடம் வேறுபட்டதாகக் காணப்படும். பொதுவாக இதன் அமைப்பினை பார்த்தால் 5 தொடக்கம் 6 அடி உயரம் கொண்ட நீண்ட அமைப்பினைக் கொண்டதாக மேல் பகுதி திரிசூலம் போன்ற அமைப்போடு இரண்டு பக்கங்களும் சங்கு சக்கரம் நடுவில் விளக்கேற்றக் கூடிய வகையில் ஒரு அமைப்பினைக் கொண்டதாகக் காணப்படும். கீழ் பகுதி தரையில் வைக்க கூடிய வகையில் மூன்று வளைந்த கால்களை கொண்டதாகக் காணப்படும். விளக்கு போன்ற பகுதியில் ராமர் படமும் வைக்கப்பட்டிருக்கும். அவ்வாறான ஒரு பொது அமைப்பிலேயே அதிகமான பகுதிகளில் காணப்படும். இருப்பினும் சில மலையகப்பகுதியை பொருத்தவகையில் இதன் அமைப்பு பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுப்பட்டதாகக் காணப்படும். பஜனை நடைபெறும் விதம் முதல் நாள் இரவு 12 மணியளவில் ஊர் எல்லைப் புறத்தில் உள்ள கிணறு அல்லது ஆற்றங்கரைக்கு சென்று அங்குள்ள தெய்வத்திற்கு விக்கேற்றி பூசை செய்து ஆற்று நீரால் கம்பத்தினையும்இ கம்பத்தினை தூக்குபவரையும் நீராட்டி கம்பத்தில் உள்ள திரிசூலத்திற்கு மூன்று தேசிக்காயை குத்திஇ கம்பத்திற்கும் கம்பம் தூக்குபவர்க்கும் விபூதிஇ சந்தனம்இ குங்குமத்தினால் பட்டையடித்து கம்பத்திற்கு விளக்கேற்றி விளக்கு ஒளியில் ஆலயம் வந்தடைவர். இங்கு பூசைகளினை செய்பவர் கோயில் பூசாரியே ஆவார். கோயில் வந்தவுடன் கோயில் உள்ளே கட்டப்பட்டிருக்கும் பச்சை பந்தலில் கம்பத்தினை வைத்து ராமருக்கு பூசை செய்வர். விடியற்காலை நான்கு மணியானதும் கம்பத்திற்கு விளக்கேற்றி பஜனைப் பாடல்களை பாடிக் கொண்டு இசைவாத்திய சத்தங்களுடன் ஊரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்வர். இவ்வாறு ஒவ்வெறு வீடுகளுக்கும் சென்று கோயில் திரும்ப விடியற் காலை 6 மணியாகும். 45 நாட்களும் இவ்வாறே பஜனை நடைபெறும். கடைசி நாள் அதாவது தைப்பொங்கல் தினத்தன்று விN~சமாக இருக்கும். கடைசி நாள் வீடு வீடாக பஜனைக்காக விடிந்த பிறகே செல்வர். கடைசி தினத்தன்று கம்பத்துடன் ராமர் சப்பரத்தில் வீடு வீடாக பவனி வருவார். கடைசி நாள் பஜனையில் இது முக்கிய விடயமாகக் காணப்படுகின்றது. ராமர் ஊரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பவனி சென்று பூசைகளினை பெற்று கோவில் திரும்பியதும் ராமருக்கு பட்டாபிN~க பூசைகள் நடைப்பெறும். பின்னர் மங்களம் பாடி பஜனையினை முடிப்பர். இவ்வாறு மங்களம் பாடும் போது மக்கள் ஆனந்த கண்ணீர் விடுவதினையும் காண முடியும். இவ்வாறான முறையிலேயே பஜனை நடைப்பெறும். வீடுகளில் பூசைகளுக்கு தயாராகும் விதம் பஜனை வீடுகளுக்கு வருவதற்கு முன்னர் கோயிலில் பூசை செய்யப்படும். அப்போது கோயில் மணிஇ சங்கு ஒலிக்கப்படும் அவ்வொலி கேட்டதும்இ வீடுகளில் பூசைகளுக்கு ஆயத்தமாகுவர். முதலில் வீட்டு முற்றத்திற்கு சாணி தெளித்து நன்றாக கூட்டுவர். பின்னர் வர்ணக்கோலங்களை வாசலில் போட்டு வீட்டு முற்றத்தை அழகுப்படுத்துவர். வாசலில் கம்பத்திற்கு நீர் ஊற்றி பூசை செய்ய குடத்தில் நீர் நிரப்பி அதில் மஞ்சள்இ பூக்களையும் போட்டு ஆயத்தப்படுத்தி வைப்பர். பூசைக்கு தேவையான பூ மாலைஇ ஊதுபத்திஇ தூப தீபங்களை ஆயத்தப்படுத்தி வைப்பர். வீடுகளில் பூசை செய்யும் முறை வீடுகளில் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் தட்டின் மீது கம்பத்தை கொண்டு வந்து வைத்தவுடன் முதலில் குடத்தில் உள்ள நீரினை மூன்று முறை கம்பத்தினை சுற்றி ஊற்றுவர். பின்னர் மாலைப்போட்டுஇ ஊதுபத்தி கொளுத்தி தூப தீபங்கள் காட்டி காணிக்கையிட்டு வணங்குவர். பூசைகளை வீட்டில் உள்ள பெண்களே செய்வர். பூசை முடிந்ததும் விபூதி தட்டு தூக்குபவர் விபூதி வைத்து விடுவார். பஜனைப் பாடல்கள் பஜனைப் பாடல்கள் பெரும்பாலும் ராமர்இ லக்குமணன்இ சீதைஇ அனுமன் போன்றோரை புகழ்ந்து பாடுவதாகக் காணப்படும். பஜனைப் பாடல்கள் வாய்மொழி ரீதியாக தலைமுறைக்கு தiலைமுறை கடத்தப்படுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப் பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். பஜனைகளில் ஒருவர் பஜனையினைப் பாடல்களை பாட மற்றவர்கள் சேர்ந்து பாடும் முறையிலேயே பாடப்படுகின்றது. பஜனையின் முதல் நாள் மங்களம் பாடி பஜனை ஆரம்பிக்கப்படும்இ அதே போல் மங்களம் பாடி கடைசி நாள் முடித்தும் வைக்கப்படுவதும் வழக்கமாகும். மங்களம் பாடுபவர் கோயில் பூசாரி அல்லது பஜனை மாஸ்டர் ஆவர். பஜனையில் பயன்படுத்தும் இசைக் கருவிகள் பஜனைகளில் டோலக்இ தாளம்இ சங்குஇ மணி மற்றும் சேகண்டி போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றது. ஆடை முறை பஜனைனயில் களந்துக் கொள்ளும் இளைஞர்கள் வே~;டியினை அணிகின்றனர். அதிகமாக பஜனைகளில் நீல நிற வே~;டி அணிவது வழக்கமாக காணப்படுகின்றது. கம்பத்தினை தூக்குபவரும்இ விபூதி தட்டினை தூக்குபவரும் கழுத்தில் உருத்திராக்க மாலை அணிவர். மலையக மக்களின் வாழ்வில் ராமர் பஜனை என்பதுஇ வெறும் ஒரு வழிபாட்டு முறை என்பதைத் தாண்டிஇ ஒரு தனித்துவமான கலாசார அடையாளமாகவே நிலைபெற்றுள்ளது. பஜனை கோயில்களில் உருவாகும் ஆன்மிக அதிர்வுகளும்இ பாடல்களின் ஊடாக வெளிப்படும் சமூக நல்லிணக்கமும்இ மலையகத் தமிழர்களின் கூட்டு மனப்பான்மையையும்இ பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய நிகழ்வுகள்இ தற்காலப் பரபரப்பான உலகில்இ அமைதியையும்இ சமூக ஒற்றுமையையும்இ ஆன்மிக பலத்தையும் தேடும் பலருக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன. மலையகத்தில் உள்ள ராமர் பஜனை மரபுகள் தொடர்ந்து செழுமை பெறுவதுஇ இந்த சமூகத்தின் ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியம்இ எதிர்காலத் தலைமுறையினராலும் பேணிப் பாதுகாக்கப்படும் என்பதற்கு ஒரு சான்றாகும். கொ. தினேஸ் நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை.
மலையக மக்களின் ராமர் பஜனை – கொ. தினேஸ்! – Global Tamil News
15