சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல  தகவல்கள்  வெளியாகி உள்ளன! – Global Tamil News

by ilankai

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல  தகவல்கள்  வெளியாகி உள்ளன. குறிப்பாக, “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் சம்பத் மனம்பேரி செயல்பட்டதாக காவற்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக  குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் காவற்துறையினரால் நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய காவற்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts