யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து – இளைஞன் படுகாயம்! – Global Tamil...

யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து – இளைஞன் படுகாயம்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு (10.09.25) இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Spread the love  அச்சுவேலி வைத்தியசாலைஇராணுவத்தினரின் வாகனம் மோதிஇலங்கைபடுகாயம்யாழ்ப்பாணம்

Related Posts