வேலணை மற்றும் மண்டைதீவுப் பகுதியில் கடற்கரைகளை தூய்மையாக்கும் பணிகள் முன்னெடுப்பு

by ilankai

வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலணை மற்றும் மண்டைதீவுப் பகுதியில் உள்ள கண்டற் தாவரங்களை சூழ்ந்துள்ள நிலப்பரப்புக்களில் தூய்மையாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வனவள திணைக்களத்தினால், முன்னெடுக்கப்பட்ட குறித்த தூய்மையாக்கல் நிகழ்வானது நாட்டில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்டது.குறித்த தூய்மையாக்கல் நிகழ்ச்சி திட்டத்தில், வனவள திணைக்களத்துடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வேலணை பிரதேச சபை, வேலணை பிரதேச செயலகம், கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்தன.அதன் போது, கண்டல் தாவரங்கள் உள்ள நிலப்பரப்பில் ஒதுங்கியிருந்த பிளாஸ்ரிக் போத்தல்கள் , கைவிடபட்ட வலைகள், ரெஜிபோம் பெட்டிகள், குப்பைகள், பொலித்தீன்கள், என ஏராளமான கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts