ட்ரம்பின் நெருக்கமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் பலி! – Global Tamil News

by ilankai

அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 31 வயதான கிர்க் புதன்கிழமை (10.09.25) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இதனை  ஒரு அரசியல் படுகொலை என மாநில ஆளுநர் விவரித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை. எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என சட்ட அமுலாக்க  செய்திகள் வெளியாகியுள்ளன. பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது. 18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார்.

Related Posts