முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து – சட்டமூலம் நிறைவேறியது – 151 ஆதரவு,...

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து – சட்டமூலம் நிறைவேறியது – 151 ஆதரவு, 01 எதிர்ப்பு. – Global Tamil News

by ilankai

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்! by admin September 10, 2025 written by admin September 10, 2025 இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூல சான்றிதழுக்கு  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் எண் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமாக அமலுக்கு வரும். ஜனாதிபதியின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 150 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டமூலம் நிறைவேறியது! 151 ஆதரவு, 01 எதிர்ப்பு. முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் மீதான விவாதம், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10.09.25) நடைபெற்றது விவாதத்துக்குப் பின்னர், சற்றுமுன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா? என சபைக்குத் தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கேட்டார். அப்போது எழுந்த ஆளும் கட்சியின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, வாக்கெடுப்பை நடத்துமாறு கோரினார்.

Related Posts