சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்

by ilankai

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு  இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.இதவேளை இந்த நிகழ்வில் பேசிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சேவைக்குள் நீதியான அதிகாரிகள் குழுவை உருவாக்குவதே தனது முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளார். 

Related Posts