நீரில் மிதந்த நிலையில் இருவரின் சடலங்கள் மீட்பு

by ilankai

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் ஹெட்டிகம பகுதியில் உள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலம் அருகே மிதந்தவாறு காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் நீரில் மூழ்கி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மரணமா? என்பது குறித்து கும்புக்கெட்டே பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இதேபோல், பல்லேகலே பொலிஸ் பிரிவின் திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்தவாறு காணப்பட்ட ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் பார்பர் வத்தை, குன்னேபான பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என தெரியவந்துள்ளது. சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பல்லேகலே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts