படுகொலையான ஊடகவியலாளர்களிற்கான நீதி கோரி தேசிய மக்கள் சக்தி தலைவர்களிடம் அறிக்கையினை கையளித்துள்ளது யாழ்.ஊடக அமையம்.மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நூலகமொன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது.யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.அதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை யாழ்.ஊடக அமையத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்ட அறிக்கை முன்னதாக யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதி கோரி அறிக்கை:கையளித்துள்ளது யாழ்.ஊடக அமையம்!
24
previous post