ஐக்கிய மக்கள் சக்தி:நீதிமன்ற படியேறும் தமிழ் வேட்பாளர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தி:நீதிமன்ற படியேறும் தமிழ் வேட்பாளர்கள்!

by ilankai

உள்ளுராட்சி தேர்தலில் பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து வேட்பாளர்கள் மீது நீதி மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வரவு செலவு அறிக்கையினை சமர்பிக்கத் தவறியதன் காரணமாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் திகதியன்று அன்று  கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது.அத்தோடு கட்சியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒரு சிலரை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்கள் மீதும் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன்,மனைவி, மகன், மருமகள், மகள் என அனைவரும் உள்ளடங்குகின்றனர். 

Related Posts