ஹரக் கட்டாவை குறிவைத்து முன்னெடுக்கப்பட இருந்த கொலை திட்டத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலையை செய்ய கமராவுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் துப்பாக்கியை வைத்து கவனமாக தயாரித்த ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கம்பஹாவில் உள்ள உடுகம்பொல, தொம்பவலவைச் சேர்ந்த 47 வயதான வெல்டர், அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். கமராவுக்குள் 3.8 மிமீ துப்பாக்கியை திறமையாக பொருத்தியதற்கு அவர் பொறுப்பேற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்தது. ஊடகவியலாளர் போல் நடித்து ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படுகொலை செய்ய திட்டமீட்டியமை இதன்மூலம் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கமராவுக்குள் மிகவும் சூட்சுமமான துப்பாக்கி – ஹரக் கட்டாவை கொல்ல முயற்சி! – Global Tamil News
13