யாழ்ப்பாண நீதிபதிகளில் மூவர் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர். யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான A.A. ஆனந்தராஜா , அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற ( High Court) நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் முந்தைய பதவிகள் திரு. எஸ்.எஸ்.கே. விதான மாவட்ட நீதிபதி திரு. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க மாவட்ட நீதிபதி திரு. ஏ.எம்.எம். ரியால் மாவட்ட நீதிபதி திரு. டீ.பீ. முதுங்கொடுவ, மாவட்ட நீதிபதி திரு. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் மேலதிக மாவட்ட நீதிபதி திரு. ஜே. கஜனிதீபாலன் மாவட்ட நீதிபதி திரு. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் திரு. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி திரு. டி.எம்.ஏ. செனவிரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான் திரு. ஜி.என். பெரேரா மாவட்ட நீதிபதி திரு. ஏ. ஜுடேசன் மாவட்ட நீதிபதி திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க மாவட்ட நீதிபதி திரு.ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய மாவட்ட நீதிபதி செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான் திரு. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க மாவட்ட நீதிபதி திரு. எம்.ஐ.எம். ரிஸ்வி மாவட்ட நீதிபதி திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
யாழ் நீதிபதிகளில் மூவர் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்! – Global Tamil News
19