16
யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டது. பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு மயக்கமுற்ற நிலையில் , வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது