மனிதவுரிமை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் 23 மே 2025 வரையில் அனுர அரசு பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் 49 பேரைக் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக 2024 இல் முழு வருடத்திலும் 38 கைதுகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.இதனிடையே தெற்கில் தொடரும் கைதுகள் தென்னிலங்கை எதிர்கட்சிகளிடையே தொடர்ந்தும் கலகத்தையே தோற்றுவித்துவருகின்றது.அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் ( சாசனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.உதய கம்மன்பில தலைமை வகிக்கும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்களிடையே கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்துள்ளார்.பல்வேறு நாடுகள் உள்நாட்டு சட்டங்களாலும் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதை தடுத்துக் கொள்வதற்குமே அதனை அறிமுகப்படுத்தியுள்ளனர். தயவுசெய்து, சாசனத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். மனித உரிமை மீறல்கள் அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் : 49 கைது!
34
previous post