விமல் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணைக்கு – Global Tamil News

by ilankai

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு  பயணம் செய்த வேளை  நடைபெற்ற போராட்டத்தின் போது வீதிகளை மறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பில்  தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் குறித்த கட்சியின் ஆறு  உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்குமாறு  கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று  திங்கட்கிழமை (01) உத்தரவிட்டுள்ளாா். குறித்த வழக்கு,  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட ஐந்து பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனா் . ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்  செய்ட் ரே அல் ஹுசைனின் இலங்கை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த  2016 பிப்ரவரி 6ம் திகதி தும்முல்ல மற்றும் பிற பகுதிகளில் ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை  மறித்த  போராட்டக்காரர்களுக்கு எதிராக கறுவாத்தோட்ட  காவலஹதுறையினரினால்   வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts