தனிநாயகம் அடிகளாரின் 45 ஆவது ஆண்டு நினைவு தினம் – Global Tamil News

by ilankai

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 45 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை (01) மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,தமிழ் சங்கத்தின் பிரதிநிதிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். Spread the love  தனிநாயகம் அடிகளாா்தமிழ் தூதுநினைவு தினம்மன்னார் தமிழ்ச் சங்கம்

Related Posts