கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) ரிக்டர் அளவில் 6.0 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனா் என தொிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு நேரம் என்பதனால் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் ரிக்டர் அளவில் 4.5 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே மாவட்டங்களில் குறைந்தது 500 பேர் பலியானதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குனார் பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி – Global Tamil News
23