மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள் – Global Tamil News

by ilankai

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் தெரியவருவதாவது, மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில் நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர். மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Related Posts