போதைப்பொருட்களுடன் யுவதி உள்ளிட்ட மூவர் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த யுவதி உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்களின் உடைமையில் இருந்து 09 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் Spread the love  ஐஸ்போதைப்பொருட்கள்யுவதிஹெரோயின்

Related Posts