முல்லைத்தீவில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்

by ilankai

வட,கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோர முல்லைத்தீவிலும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பலபகுதிகளிலும் , இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.  இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். 

Related Posts