ரணில் வீடு திரும்பினார்:ராஜித உள்ளே சென்றார்!

by ilankai

கைதாகி சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியேறியுள்ளார்.ரணில் விக்ரமசிங்க,  வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகி இருந்த முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.அவரை, அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிடடுள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் ராஜித தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.கிரிந்த மீன்வள துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இருநூறு மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக கைது அரங்கேறியுள்ளது.அதே போன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்   நிமல் லான்சாவும், கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுமகனொருவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியமை மற்றும் ஒருவரை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டின் கீழ், வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக காவல்; நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோன்றே அத்துரலியே ரத்தன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .அவர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts