செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இதனிடையே செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 36 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.கட்டம் கட்டமாக இதுவரையில் 44 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 164 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 177 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
			43
			
				            
			
			        
    
                        previous post
                    
                    
                        வயோதிபப் பெண் உடலம் மீட்பு!
                        next post