உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய குழுக் கட்டிடம் மீது ரஷ்யா தாக்குதல்!

by ilankai

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றிய  குழு  தங்கியிருக்கும் கட்டிடம் சேதமடைந்தது.உக்ரைனின் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது14 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.இத்தாக்குதலை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் வான் டெர் லேயன் ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்தார்.புடின் குழந்தைகளையும் பொதுமக்களையும் கொன்று, அமைதிக்கான நம்பிக்கையை நாசப்படுத்துகிறார் என்று இங்கிலாந்தின் பிரதமர் ஸ்டார்மர் குற்றம் சாட்டினார்.ரஷ்யாவின் பயங்கரவாதம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் சாடுகிறார்.ஒரே இரவில் 629 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

Related Posts